தளபதி விஜயை சந்தித்து பேசியுள்ளார் குக் வித் கோமாளி ஷிவாங்கி.

Shivangi With Thalapathy Vijay : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் கோமாளியாக ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தை பிடித்திருப்பவர் சிவாங்கி.

விஜயை சந்தித்த குக் வித் கோமாளி ஷிவாங்கி.. தளபதி சொன்ன வார்த்தை - இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்.!!

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது இவர் நடிகையாகவும் டான் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜயை சந்தித்து பேசியுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சிவாங்கி.

விஜயை சந்தித்த குக் வித் கோமாளி ஷிவாங்கி.. தளபதி சொன்ன வார்த்தை - இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்.!!

தளபதி விஜய் சொன்ன வார்த்தைகளுக்கு அவர் நன்றி கூறியுள்ளார். மேலும் இந்த சந்திப்புக்கு காரணமாக இருந்த சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என சிவாங்கி தெரிவித்துள்ளார். இந்த க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகின்றன.