Shivangi Visit to CWC Set

திரும்பவும் குக்கு வித்து கோமாளி செட்டுக்கு தன்னுடைய நண்பருடன் சென்றுள்ளார் ஷிவாங்கி.

Shivangi Visit to CWC Set : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சில வாரங்களுக்கு முன்னர்தான் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

அடுத்த சீசன் எப்போது தொடங்கும் யாரெல்லாம் குக்காக பங்கேற்க போகிறார்கள்? புகழ், சிவாங்கி, பாலா உள்ளிட்ட கோமாளிகளை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் சிவாங்கி தன்னுடைய நண்பர் சாம் விஷாலுடன் குக்கு வித் கோமாளி செட்டுக்கு சென்றுள்ளார். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களையும் கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியையும் ரொம்பவே மிஸ் செய்வதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.