அட்டை படத்திருக்காக போட்டோ ஷூட் செய்திருக்கும் சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு தன்னைக் கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கலந்து கொண்ட சிவாங்கி தனது பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையாடித்தார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவாங்கி தனது நகைச்சுவையினால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது மட்டுமின்றி தனக்கென தனி இடத்தையும் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.

ஒரு போட்டோ ஷூட் மூலம் தன்னை கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் சிவாங்கி - வைரலாகும் புகைப்படம்.

இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் நடிகர் அஸ்வினுடன் இவர் செய்த நகைச்சுவை அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றிருக்கும் சிவாங்கி இதற்கிடையே சில படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

ஒரு போட்டோ ஷூட் மூலம் தன்னை கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் சிவாங்கி - வைரலாகும் புகைப்படம்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “டான்” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருந்த சிவாங்கி இதனைத் தொடர்ந்து வடிவேலுக்கு மகளாக “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சிவாங்கி அவ்வப்போது தனது instagram பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

ஒரு போட்டோ ஷூட் மூலம் தன்னை கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் சிவாங்கி - வைரலாகும் புகைப்படம்.

இவர் தற்போது அட்டை படத்திற்காக போட்டோ ஷூட் செய்துள்ளார். பிங்க் நிற புடவையில் அசத்தலான போஸ்களை கொடுத்து ஹீரோயின்களுக்குகே டஃப் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் சிவாங்கியின் ஆடை குறித்து ட்ரோல் செய்திருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த ஒரு போட்டோ ஷூட் மூலம் சிவாங்கி அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் இடையே பல லைக்ஸ்களை குவித்து வருகிறது.