சிவாங்கி தொகுப்பாளராக அறிமுகம் ஆக இருப்பதாக கூறியிருந்த நிலையில் அவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Shivangi As Anchor in Vijay TV Show : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் போட்டியாளராக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் வென்றார்.

இது திடீர் ட்விஸ்ட்டா இருக்கே.. சிவாங்கி தொகுத்து வழங்கப் போவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இல்லை.. இதுதான் - வெளியானது ப்ரோமோ வீடியோ.!!
வெங்கடேஷ்-திரிபாதி தரமான ஆட்டத்தில், தெறித்தோடியது மும்பை.. களவிவரம்..

மேலும் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் தொகுப்பாளினியாக அறிமுகமாக இருப்பதாக சிவாங்கி தெரிவித்திருந்தார்.

சுவையான Chicken Fried Rice செய்வது எப்படி..? | How to Make Chicken Fried Rice.! | Chennai | Tamil HD

மேலும் இவர் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இவர் தொகுத்து வழங்கப் போவது அந்த நிகழ்ச்சி இல்லை என தெரிய வந்துள்ளது.

பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த இன்னொரு நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியை தான் சிவாங்கி தொகுத்து வழங்குகிறார். இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவாங்கிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.