சுரேஷ்

சுரேஷ் மாமா பிக்பாஸ் 4 உங்களால் மட்டும் தான் நல்ல துவக்கம் மற்றும் சுவாரஸ்யமாக சென்றது என பிக்பாஸ் நடிகையின் கணவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாற்பதாவது நாளை நெருங்கி கொண்டிருக்கிறது.

இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து ரேகா, பாடகர் வேல்முருகன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி என மூவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிலும் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டதால் கொஞ்சமும் நியாயம் இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சுரேஷ் மாமா பிக்பாஸ் 4 உங்களால் மட்டும் தான் சுவாரஸ்யமா போச்சு - பிக்பாஸ் நடிகையின் கணவர் பாராட்டு.!!

இந்த நிலையில் நடிகரும் பிக்பாஸ் நடிகையான சுஜா வருணி கணவருமான சிவகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் சுரேஷ் மாமா உங்களுக்கே தெரியும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் உங்களால் தான் நல்ல துவக்கம் மற்றும் விறுவிறுப்பாக சென்றது. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. வாங்க பார்ட்டி பண்ணலாம் என தெரிவித்துள்ளார்.

சிவகுமாரின் பதிவை பார்த்த ரசிகர்கள் நீங்க சொல்வது அத்தனையும் உண்மை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.