Siva Peruman

ஐந்து பொருட்களை சிவனுக்கு படைத்தல் கூடாது.

1. தாழம்பூ:
ஒருமுறை பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற சண்டை எழுந்தபோது, சிவன் ஜோதிலிங்கமாய் தோன்றினார்.

விஷ்ணு காலை நோக்கியும், பிரம்மா தலையையும் நோக்கி தேடிச் செல்லும்போது, இருவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. இதில் விஷ்ணு தனது தோல்வியை ஒத்துக் கொள்கிறார்.

ஆனால் பிரம்மாவோ முடியைக் கண்டுவிட்டதாக பொய் கூறி, சாட்சிக்காக தாழம்பூவையும் அழைத்து வருகிறார். இதனால் கோபமுற்ற சிவன் பிரம்மாவின் தலையைக் கொய்து விட்டு தாழம்பூவை தனக்கு எப்போதும் படைக்கக் கூடது என தாழம்பூவிற்கும் சாபம் விடுத்ததாக சிவபுராணம் கூறுகிறது.

2. துளசி:
ஜலந்தர் என்னும் அசுரனை
சிவபெருமான் கொன்று சாம்பலாக்கினார். இதனால் கோபமடைந்த அசுரனின் மனைவி துளசி தன்னுடைய தெய்வீக மலர்களின் மூலம் சிவனை மறையச் செய்தாள். இதன் காரணமாக துளசியை சிவனுக்கு படைப்பதில்லை.

3. தேங்காய் நீர்: சிவனுக்கு படைக்கும் எந்த பிரசாதத்தையும் நாம் சாப்பிடக் கூடாது. பொதுவாக தேங்காயை கடவுளுக்கு படைப்போம். அதனை பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தேங்காயிலிருக்கும் நீரை பிரசாதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

4. மஞ்சள், குங்குமம் இவற்றையும் படைக்க கூடாது என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here