Shine Tom Chacko in Vijay65

தளபதி 65 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shine Tom Chacko in Vijay65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி 65 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ‌‌

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. இதனை அடுத்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தளபதி 65 திரைப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது மலையாள திரையுலகைச் சார்ந்த ஷைன் டாம் சாக்கோ என்ற நடிகர் படத்தில் விஜயுடன் நடிக்க இருப்பதாகவும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.