Shilpa Shetty Dance to Vaathi Coming
Shilpa Shetty Dance to Vaathi Coming

தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாட்டுக்கு பாலிவுட் நடிகை ஆட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Shilpa Shetty Dance to Vaathi Coming : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தில் இருந்து வெளியான வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு டிக்டாக்கில் பலரும் ஆட்டம் போட்டு அந்த வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கையில் துடைப்பத்துடன் மாஸ்டர் பாட்டுக்கு ஆட்டம் போட்ட ரம்யா – வைரல் வீடியோ இதோ

நடிகைகள் நடிகர்களும் இந்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டு அந்த வீடியோக்களை தங்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகையான ஷில்பா ஷெட்டியும் விஜயின் வாத்தி கம்மிங் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர். பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்து கமெண்ட் செய்துள்ளார்.