Sherin About Tharshan BreakUp
நான் அதிர்ஷ்டசாலி தான் என தர்ஷன், சனம் ஷெட்டி காதல் முறிவு குறித்து முதல் முறையாக பேசியுள்ளார் ஷெரின்.

Sherin About Tharshan Breakup : தமிழ் சினிமாவில் தனுஷுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமானவர் ஷெரின், அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் மீண்டும் தன்னை அறிமுகபடுத்திக் கொண்டார்.

மேலும் தர்ஷன், சனம் காதல் முறிவுக்கு ஷெரின் தான் காரணம், பிக் பாஸில் இவர்களுக்குள் மலர்ந்த காதல் தான் இந்த காதலுக்கு தடையானது எனவும் பலர் விமர்சனம் செய்து வந்தனர்.

இதுநாள் வரை இது பற்றி வாய் திறக்காமல் இருந்து வந்த ஷெரின் தற்போது முதல் முறையாக பதிவு ஒன்றின் மூலமாக மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

தர்ஷன், சனம் விவகாரம் என குறிப்பிடாமல் அவர் பதிவிட்டு இருபதாவது, கடந்த ஒரு மாதமாக என்னை பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது. யாரோ செய்த தவறுக்காக என்னை விமர்சிப்பது சரியல்ல.

நான் தற்கொலை முயற்சி செய்யல.. பிக் பாஸில் நடந்ததை மேடையில் புட்டு புட்டு வைத்த மதுமிதா – என்ன சொல்றாரு பாருங்க

பேக் கணக்குகள் மூலமாக என்னை வசைபாடுவதையும் ட்ரோல் செய்வதையும் என்னால் ஏற்று கொள்ள முடியாது. இருவரின் காதல் பிரிவர்வதற்கு பல பிரச்சனைகள் இருக்கலாம் என பேசியுள்ளார்.

மேலும் என் மீதுள்ள கோபத்தை என் கமெண்ட் செக்சனில் திட்டி தீர்த்தால் குறையும் என்றால் திட்டி கொள்ளுங்கள். அது என் மதிப்பை குறைக்காது என கூறியுள்ளார்.

மேலும் திட்டுவதாக இருந்தால் என்னை திட்டுங்கள், குற்ற உணர்ச்சி இருப்பவர்களுக்கு தான் அது சேரும். என்னிடம் சண்டை போடுபவர்களும் எனக்காக சண்டை போடுபவர்களும் கிடைத்ததால் நான் அதிர்ஷ்ட சாலி தான்.

இனியும் இது பற்றி பேச மாட்டேன் என அந்த பதிவில் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

????????

A post shared by Sherin Shringar (@sherinshringar) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.