shraddha srinath

மீ டூ விவகாரத்தில் நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை பற்றி கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

தினமும் ஒரு நடிகை யாரவது ஒருவர் மீது பரபரப்பு குற்றசாட்டை வைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இது குறித்து விக்ரம் வேதா நடிகையான ஷ்ரத்தா ஸ்ரீநாத் மீ டூ பற்றி நடிகர்களை வெளுத்து வாங்கியுள்ளார்.

படத்தில் 70 mm ஸ்கிரீனில் நல்லவர்களாக வீர வசனம் பேசி வரும் நீங்கள் இப்போது இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்? இதற்கெல்லாம் உங்களின் கருத்து என்ன? அவ்வளவு தான் என பதிவிட்டுள்ளார்.

ஆனால் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒட்டு மொத்தமாக அனைத்து ஹீரோக்களையும் கூறுகிறாரா? அல்லது கன்னட நடிகர்களை மட்டும் கூறுகிறாரா? என தெரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.