Shanthanu Reveals Secret of Oru Chance Kudu
Shanthanu Reveals Secret of Oru Chance Kudu

மாலையில் பேசினோம் மறுநாள் காலையில் களத்தில் இறங்கி விட்டோம் என ஒரு சான்ஸ் கொடு ஆல்பம் குறித்து சாந்தனு கூறியுள்ளார்.

Shanthanu Reveals Secret of Oru Chance Kudu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சாந்தனு. தளபதி விஜயின் தீவிர ரசிகரான இவர் தற்போது அவருடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அஜித் படத்தை சென்னையில் ரிலீஸ் செய்யும் இளம் நடிகர் – இதோ அவரே பதிவிட்ட ட்வீட்.!

மார்ச் மாதம் ரிலீசாக இருந்த இப்படம் கொரானா தொற்று காரணமாக தள்ளிப்போய் வருகிறது. இதற்கிடையில் சாந்தனு யூட்யூப் பக்கத்தில் ஒரு புதிய சேனலை தொடங்கி அதில் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இது ஒருபுறமிருக்க தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் கலையரசன் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் மற்றும் மேகா ஆகாஷ் உடன் இணைந்து ஒரு சான்ஸ் கொடு என்ற ஆல்பத்தில் நடித்துள்ளார்.

இந்த ஆல்பம் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இது குறித்து தன்னுடைய டுவட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் சாந்தனு.

மாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா? – வெளியான ஷாக்கிங் தகவல்

மாலையில் இது குறித்து சாதாரணமாக பேசிக் கொண்டோம். மறுநாள் காலையில் சூட்டை தொடங்கி விட்டோம் என கூறியுள்ளார்.

அவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.

இந்தப் பதிவிலும் விஜய் ரசிகர் ஒருவர் மாஸ்டர் ட்ரெய்லர் அப்டேட் என அப்படத்தைப் பற்றியே கேட்டுள்ளார்.