Shanthanu and vijay
Shanthanu and vijay

 Shanthanu and vijay : ‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

25-வது நாளிலும் சீட் இல்லாமல் தரையில் அமர்ந்து படம் பார்த்த அஜித் ரசிகர் – வைரல் புகைப்படம்.!

தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

இவருடைய ரசிகர் படை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். அதில் பிரபலங்களும் அடங்குவர். அப்படி விஜய்யின் தீவிர ரசிகராக இருக்கும் ஒரு பிரபலம் நடிகர் சாந்தனு.

இவர் அடுத்ததாக விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ராவணக் கூட்டம் எனும் படத்தில் நடிக்கிறார். இந்த டைட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டைட்டிலை கேட்ட விஜய், தலைப்பு சிறப்பாக இருப்பதாக சாந்தனுவிற்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த தகவலை சாந்தனு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய்யுடன் சேர்ந்து நாமும் சாந்தனுவை வாழ்த்துவோம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.