Shanthanu About Viswasam

Shanthanu About Viswasam : விஸ்வாசம்  போஸ்டரை பற்றி விஜயின் தீவிர ரசிகரும் நடிகருமான சாந்தனு தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

தல அஜித் நடித்து உள்ள விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் எந்தவித முன்னறிவிப்பும் இன்று நேற்றிரவு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க வைத்துள்ளது.

காரணம் மோஷன் போஸ்டர் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போல இல்லாமல் பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இந்நிலையில் விஜயின் தீவிர ரசிகரும் நடிகருமான சாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஸ்வாசம் மோஷன் போஸ்டர் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் அஜித் செம மாஸ் பக்கா என்டர்டைன்மெண்ட், டி. இம்மானின் பக்கா மியூசிக். விஸ்வாசம் நிச்சயம் ஒரு கலாட்டா சரவெடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். என்னத்த சொல்ல தல அஜித் செம்ம செம்ம செம்ம மாஸ் என பதிவிட்டுள்ளார்.