Shanthanu About Master Trailer
Shanthanu About Master Trailer

மாஸ்டர் பட ட்ரெய்லர் பற்றி வருத்தத்துடன் பேசியுள்ளார் சாந்தனு.

Shanthanu About Master Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் உறவினரான பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், கே பி ஒய் தீனா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாக இருந்த இப்படம் கொரோனா வைரஸால் தள்ளிப் போனது. இதனால் ரசிகர்கள் அனைவரும் தற்போது படத்தின் டிரைலருக்காக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் மாஸ்டர் படம் பிரம்மாண்டமாக வந்திருப்பதாகவும் ட்ரைலர் சூப்பராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

அதே போல் அர்ஜுன் தாஸ் பேட்டி ஒன்றில் மாஸ்டர் டிரைலரை பார்த்துட்டேன். செம மாசா இருக்கு. ஒரு டயலாக் செம ட்ரெண்ட் ஆகும் என கூறியிருந்தார்.

மாஸ்டர் ரிலீஸ் பற்றி வருத்தத்துடன் பிரபல இயக்குனர் ரத்னகுமார் பதிவிட்ட பதிவு – என்ன சொல்கிறார் பாருங்க.!

இந்த நிலையில் நடிகர் சாந்தனு அளித்துள்ள பேட்டி ஒன்றில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்த போது லோகேஷ் என்னை ஸ்டூடியோவிற்கு அழைத்தார்.

அப்போது நான் ஷார்ட் பிலிமில் பிஸியாக இருந்ததால் என்னால் செல்ல இயலவில்லை. இதனால் மாஸ்டர் ட்ரைலரை பார்க்கும் வாய்ப்பை மிஸ் செய்து விட்டேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் சாந்தனு முருங்கக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.