மாஸ்டர் படத்தால் கிடைத்த ஏமாற்றும் மற்றும் வேதனை குறித்து சாந்தனு பேட்டி அளித்துள்ளார்.

மாஸ்டர் படத்தால் கிடைத்த ஏமாற்றம் மற்றும் வேதனை குறித்து சாந்தனு பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மாஸ்டர்.

தளபதி விஜய் உடன் எக்கச்சக்கமாக திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்தனர். அவர்களின் ஒருவர் தான் நடிகர் சாந்தனு. ‌ ‌‌

இந்த நிலையில் தற்போது இவர் இந்த படத்தால் கிடைத்த ஏமாற்றம் மற்றும் வேதனை குறித்து பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

இந்த படத்துக்காக முப்பது நாள் சூட்டிங் சென்றேன். எனக்கென தனியாக பாடல் விஜய் அண்ணாவுடன் சேர்ந்து ஒரு சண்டைக்காட்சி என நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டன. கிட்டத்தட்ட என்னுடைய காட்சிகள் படத்தில் 40 நிமிடங்கள் இடம் பெறும் என சொல்லி இருந்தார்கள்.

அதன் காரணமாகவே படம் ரிலீசுக்கு முன்னால் நாம் நிறைய பேட்டிகள் கொடுத்தேன். ஆனால் படம் பார்த்த பிறகு தான் தெரிந்தது என்னுடைய காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்ட வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே நான் படத்தில் இடம்பெற்றேன்.

இதனால் நிறைய ஏமாற்றமும் மனவேதனையும் அடைந்தேன் என ஷாந்தனு தெரிவித்துள்ளார். இதெல்லாம் முன்கூட்டியே தெரிந்திருந்தால் பேட்டியே கொடுத்திருக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.