மகாராஜா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் மாஸ் காட்டி வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் மகாராஜா என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார்.
இந்த படம் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு அந்த பதிலாக முதலில் சாந்தனுவிடமே இந்த கதை சொல்லப்பட்டிருக்கிறது அவருக்கும் கதை பிடித்ததால் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி தான் இந்த படத்தில் நடித்திருந்தார்.
அதற்கு விளக்கம் கொடுத்த சாந்தனு, மகாராஜா படத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்றும், நான் சரியான கதையை தான் தேர்வு செய்தேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். குறிப்பாக தயாரிப்பாளர்கள் அப்போது ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இந்தப் படத்தில் நடிக்காததற்கு எனது அப்பா காரணம் கிடையாது என்று பேசியுள்ளார்.
மேலும் நயன்தாராவை வைத்து நித்திலன் சுவாமிநாதன் மகாராணி என்ற திரைப்படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.