Shantanu Tweet About Thalapathy64 : Official Tweet Inside | Thalapathy Vijay | Vijay Sethupathi | Malavika Mohanan | Kollywood Cinema News
தளபதி 64 படத்தில் கமிட்டானதும் சாந்தனு ட்வீட் ஒன்றை பதிவிட அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Shantanu Tweet About Thalapathy64 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் கமிட்டாகியுள்ளார், அதுமட்டுமில்லாமல் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க மாணவனாக சாந்தனு நடிக்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மலையாள நடிகராக ஆண்டனி வர்கீஸ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். நேற்று மாலை 3 மணிக்கு இப்படத்தில் சாந்தனு கமிட்டாகி இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்த அறிவிப்பிற்கு பிறகு சாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் கனவுகள் நிஜமாகும். விஜய் அண்ணாவுடன் நடிக்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறி விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் பிரிட்டோ ஆகியோருக்கு நன்றி கூறியுள்ளார்.

இதோ அவருடைய பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.