Ajith
விபத்தில் சிக்கிய அஜித் பற்றி மாஸ்டர் பட நடிகர் பதிவிட்டுள்ள ட்வீட் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Shantanu Tweet About Ajith : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவர் தல அஜித், உடம்பில் எக்கசக்கம்மான ஆபரேஷன் நடந்திருந்தாலும் தன்னுடைய ரசிகர்களுக்காக ரிஸ்க்கான காட்சிகளில் கூட டூப் இல்லாமல் நடிப்பவர்.

அப்படி டூப் இல்லாமல் வலிமை பட காட்சியில் நடித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறு காயமடைந்துள்ளார், இதனால் தல ரசிகர்கள் #GetWellSoonThala என்ற ஹேஸ்டேக்கில் இறைவனை பிராத்தனை செய்து வந்தனர்.

விஜய் ரசிகர்கள் அஜித்திற்கு ஏற்பட்ட விபத்தை கிண்டலடிக்கும் விதமாக அய்யோ அம்மா பைக் ரேஸ் என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

இதற்கிடையில் மாஸ்டர் பட நடிகர் சாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தல அஜித் விரைவில் குணமடைய வேண்டும் என ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். ஷாந்தனுவின் இந்த பதிவிற்கு அஜித் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.