Shanthanu
KGF பட கெட்டப் போல வித்தியாசமான தோற்றத்தில் சாந்தனு வெளியிட்ட புகைப்படம் கோலிவுட்டை மிரள வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாந்தனு. விஜயின் தீவிர ரசிகரும் இயக்குனர் பாக்கியராஜின் மகனுமான இவர் கடந்த சில வருடங்களாக வெற்றிக்காக போராடி வருகிறார்.

இந்நிலையில் மாஸ்டர், வானம் கொட்டட்டும் என சிறப்பான படங்களை தேர்வு செய்துள்ளார், இதனால் 2020 அவருக்கு பிரகாசமான வருசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் ஷாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் கிட்டத்தட்ட KGF பட ஸ்டைலில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

கூடவே பழி வாங்குவதற்காக நேரத்தை செலவிடாதீர்கள், வென்று காண்பிப்பது தான் சிறந்த பழி வாங்குவதல் என்பது போல டைலாக் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

ஷாந்தனுவின் இந்த லுக்கிற்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தான் உங்க மாஸ்டர் லுக்கா எனவும் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.