மாஸ்டர் பட நடிகர் ஒருவர் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Shantanu in Beerpal Remake : கன்னட சினிமாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்த திரைப்படம் பீர்பால். கன்னடாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இந்தத் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

மாஸ்டர் திரைப்பட நடிகருக்கு அடித்த ஜாக்பாட்.. சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் - யார்? என்ன படம் தெரியுமா?

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சாந்தனு நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்தப் படம் மட்டுமல்லாமல் நடிகர் சாந்தனு நடிப்பில் ராவண கூட்டம், முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.