Shanmuga Pandiyan New Movie : ஷண்முக பாண்டியனை அஜித் பட பிரபலம் இயக்க இருப்பதாகவும் பூஜையுடன் தொடங்கிய அப்படத்தின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Shanmuga Pandiyan New Movie :

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர் கேப்டன் விஜயகாந்த், உடல்நல குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில் அவர் தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவருடைய மகன் ஷண்முக பாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அஜித் பட பிரபலத்தின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

கீரிடம் பட லுக்கில் படு ஸ்லிம்மாக தல அஜித் – வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

ஆம், தல அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களில் சிறுத்தை சிவாவின் இணை இயக்குனரான பணியாற்றிய பூபாலன் தான் இந்த படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. இந்த பூஜையில் கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்தும் கலந்து கொண்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.