Shanmuga Pandiyan Lover : கேப்டன் விஜயகாந்தின் வருங்கால மனைவி என வெளிநாட்டு பெண் ஒருவரின் புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். எந்தவொரு நடிகரின் பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்தவர் கேப்டன்.

சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் மக்கள் பலரையும் கவர்ந்தார் விஜயகாந்த். இவரது மூத்த மகன் ஷண்முக பாண்டியன் மதுர வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் வலம் வரத் தொடங்கி விட்டார்.

மேலும் இவர் கடந்த வருடம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தார்.

இவர் நெதர்லாந்தை சேர்ந்த பெண் எனவும் ஷண்முக பாண்டியனுடன் பெண் எனவும் இருவரும் காதலித்து வருவதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனையடுத்து தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Shanmuga-pandiyan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.