Shankar in Failure Movies

ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி எதிர்பாராத தோல்வியை தழுவிய இரண்டு திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

Shankar in Failure Movies : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் இயக்குனராக தடம் பதித்தார். இவருடைய முதல் படமே மிகப்பெரிய அளவிற்கு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

முதல் படத்தை தொடர்ந்து சங்கர் அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றி படங்களாகவும் பிரம்மாண்ட படங்களாக கொடுத்து வந்தார். தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் நாயகி என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார் ஷங்கர். ஆனால் அங்கு தமிழ் கிடைத்த வரவேற்பு கிடைக்கவில்லை. பெரிய அளவில் வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது.

அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாய்ஸ். இன்று பலரின் ஃபேவரைட் திரைப்படமாக இப்படம் இருந்து வருகிறது. ஆனால் இந்த படம் வெளியான காலகட்டத்தில் மிகவும் வல்கராக இருப்பதாக பேச்சு எழுந்தது. இதனால் அப்போது இப்படமும் தோல்வியைத் தழுவியது.

ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி தோல்வியைத் தழுவிய திரைப்படங்கள் என்றால் இந்த இரண்டு படங்களை கூறலாம்.