Shankar Donates to CM Fund

கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கினார் இயக்குனர் சங்கர்.

Shankar Donates to CM Fund : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதி அளித்து வருகின்றனர்.

இந்த வகையில் தற்போது இயக்குனர் ஷங்கர் கொரோனா நிவாரண நிதிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கியுள்ளார்.