
Thalapathy 64 : வைரலாகி வரும் விஜயின் லேட்டஸ்ட் புகைப்படங்களால் தளபதி விஜய் அடுத்த படத்திற்காக ஷங்கருடன் இணைகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மனைவி தளபதி விஜயை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். அந்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய அடுத்த படத்திற்காக ( தளபதி 64 ) ஷங்கருடன் இணைகிறாரா தளபதி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் அடுத்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 2 பாயிண்ட் ஓ படம் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து ஷங்கர் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.