சங்கர், சூர்யா கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய் பீம். மேலும் இவர் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

சங்கர், சூர்யா கூட்டணியில் உருவாகும் மிகப் பிரம்மாண்ட திரைப்படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது? வெளியான சூப்பர் தகவல்

இதனைத் தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் அந்த படத்தை தயாரித்து வருகிறார். மேலும் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திர கதையில் நடிக்கிறார்.

இதற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க இருப்பதாக தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.

சங்கர், சூர்யா கூட்டணியில் உருவாகும் மிகப் பிரம்மாண்ட திரைப்படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது? வெளியான சூப்பர் தகவல்

இந்த படம் வேல்பாரி கதையை தழுவி உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கதை குறித்து சூர்யா விருமன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த நிலையில் இந்த கூட்டணி இணைவது உறுதியென தெரிய வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன‌.