ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் வில்லன் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Shankar and Ram Charan Movie Villian : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ள சங்கர் அடுத்ததாக இந்தியன் 2, ராமச்சரன் வைத்து தெலுங்கில் ஒரு படம் மற்றும் ரன்வீர் சிங்கை வைத்து பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

தடகள சாம்பியன்ஷிப் : வெண்கலம் வென்றது இந்திய அணி..

இந்தியன் 2 திரைப்படம் தவிர்த்து மற்ற இரண்டு படங்களிலும் நாயகியாக கியாரா அத்வானி தான் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது ராம்சரண் படத்தில் வில்லனாக நடிக்க பகத் பாசிலுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே அவர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் படத்தில் நடிக்கிறார். இதனால் தன்னுடைய படத்திலும் வில்லன் வேடத்தை ஏற்று நடிப்பார் என்ற நம்பிக்கையுடன் சங்கர் பகத் பாசிலுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

திடீர் Viral “அன்றே கணித்தார் அஜித்” முதல்வரின் அதிரடி திட்டம்.. Viral On Social Media..! 

விரைவில் இந்த படத்தின் வில்லன் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.