பல நாட்களுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் பார்த்து பதிவு செய்துள்ளார் ஷங்கர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

பல நாட்களுக்குப் பிறகு திருச்சிற்றம்பலம் படம் பார்த்து ட்வீட் போட்ட சங்கர்.. என்ன சொல்கிறார் பாருங்கள்.!!

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் நித்யா மேனன் ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்திருந்தனர். இருந்தாலும் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இடையேயான நட்பு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

பல நாட்களுக்குப் பிறகு திருச்சிற்றம்பலம் படம் பார்த்து ட்வீட் போட்ட சங்கர்.. என்ன சொல்கிறார் பாருங்கள்.!!

பலரிடமிருந்து பாராட்டுகளை பெற்று வரும் இந்த படத்தை பார்த்து தற்போது ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார் இயக்குனர் சங்கர். அதாவது அவரது பதிவில் இப்படி ஒரு படத்தை சமீபத்தில் பார்த்ததில்லை. நித்யாமேனன் நடிப்பு மிகவும் சிறப்பு. பாரதிராஜா பிரகாஷ் ராஜ் என எல்லோரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். வழக்கம் போல தனுஷ் அனிருத் கூட்டணி வெற்றியை பெற்றுள்ளது அனைத்து பட குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.