தங்கையுடன் ஷாலினி கொஞ்சி விளையாடும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

Shalini With Shamili : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையில் அறிமுகமான இவர் அதன் பின்னர் நாயகியாக நடிக்க தொடங்கினார். பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஷாலினி தல அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அஜித்தை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு படங்களில் நடிப்பதை அடியோடு நிறுத்தி விட்டார். தன்னுடைய குடும்பத்தைக் கவனிப்பதில் மட்டுமே முழு நேரத்தையும் செலவழித்து வருகிறார். ஷாலினிக்கு ஷாமிலி என சகோதரியும் ரிச்சர்ட் என்ற சகோதரனும் இருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ஷாலினி தன்னுடைய சகோதரி ஷாமிலி உடன் கொஞ்சி விளையாடும் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தங்கையுடன் கொஞ்சி விளையாடும் ஷாலினி.. இணையத்தை கலக்கும் குழந்தை பருவ புகைப்படம்