திரையரங்கில் இருந்து ஷாலினி அஜித்குமாரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் ஜெய்லர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த இப்படத்தை ரசிகர்களுடன் திரை பிரபலங்கள் பலரும் திரையரங்குகளில் கண்டு களித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னாள் முன்னணி நடிகையையும், நடிகர் அஜித்குமாரின் மனைவியுமான நடிகை ஷாலினி அஜித்குமார் ஜெய்லர் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை திரையரங்கில் கண்டு களித்துள்ளார். அப்போது ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.