Actress Ajith Shalini

Actress Shalini Ajith : அஜித்தின் மனைவி ஷாலினி படக்குழுவினருடன் சேர்ந்து விஸ்வாசம் படத்தை பார்த்து ரசித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு ( ஜனவரி 10 ) வெளியாக உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இம்மான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே தல அஜித் தயாரிப்பாளர் தியாகராஜனுடன் சேர்ந்து இந்த படத்தை பார்த்து விட்டு பாராட்டி இருந்தார். இதனையடுத்து தற்போது ஷாலினியும் விஸ்வாசம் படத்தை பார்த்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.