Shalini Ajith Re-entry in Tamil Cinema

21 வருடங்கள் கழித்து ஷாலினி அஜித் படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shalini Ajith Re-entry in Tamil Cinema : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷாலினி அஜித். இவர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம், அலைபாயுதே போன்ற சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார் ஷாலினி.

இதனைத் தொடர்ந்து அஜித்துடன் நடித்த அமர்க்களம் திரைப்படத்தின் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஷாலினி அஜீத் தற்போது வெள்ளித்திரைக்கு வரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தல அஜித் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.