சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி ‘சாகுந்தலம்’ திரைப்படம் வெளியானது. குணசேகரன் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்திருந்தார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் சாகுந்தலம் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி சாகுந்தலம் திரைப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் தளத்தில் மே 11ஆம் தேதியான இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான ஹேஷ்டாக்கை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.