தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குடிக்கும் சமந்தா நாக சைதன்யா விவாகரத்து குறித்து பேசிய ரசிகர்களை வறுத்து எடுத்து விட்டார் நடிகை ஷகிலா.
Shakeela About Dhanush Aishwarya Divorce : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தனது மனைவியை திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் அவரை விட்டு பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்படியான நிலையில் ஐஸ்வர்யாவுக்கும் அனிருத்துக்கும் தொடர்பு அதனால்தான் இருவரும் பிரிந்து விடுகிறார்கள் என பயில்வான் ரங்கநாதன் வாய் கூசாமல் பேசி இருந்தார். சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் பல கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
தனுஷ் 💔 ஐஸ்வர்யா விவாகரத்து – தனுஷ் மேனேஜர் Subramaniam Siva கருத்து

இதையெல்லாம் பார்த்த ஷகிலா இது அவர்களின் பர்சனல் விஷயம். முடிவு என்ன என்பதை அவர்களே தெளிவாக அறிவித்துவிட்டார்கள். அப்படி இருக்கையில் அவர்களது விஷயத்தில் மூக்கை நுழைப்பது நாகரிகம் இல்லை. இப்படித்தான் சமந்தா விவாகரத்து செய்த போது பேசினார்கள். அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். உங்கள் வீட்டில் இருக்கும் அக்கா தங்கைக்கு விவாகரத்து நடந்தால் எதிர் வீட்டு பையன் ஒரு தொடர்பு அதனால்தான் விவாகரத்தாகி விட்டது என பேசுவீர்களா? அவங்களுக்கும் மனசு இருக்கு அது எவ்வளவு கஷ்டப்படும் என தவறாகப் பேசி அவர்களை வறுத்து எடுத்துள்ளார் நடிகை ஷகிலா.