ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ஒரு மாசத்திற்கு சென்னையில் தங்க திட்டமிட்டு இருக்கும் ஷாருக்கானின் புதிய தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமான இயக்குனர் அட்லி தற்போது ஹிந்தியில் முதல்முறையாக “ஜவான்” என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் கதாநாயகனாக ஷாருக்கான் நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

ஒரு மாசத்திற்கு சென்னையில் தான்… ஷாருக்கானின் முடிவு - உற்சாகத்தில் ரசிகர்கள்!!

விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஷாருக்கான் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வரும் இப்படத்தில் அப்பா ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.

ஒரு மாசத்திற்கு சென்னையில் தான்… ஷாருக்கானின் முடிவு - உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதால் முதலில் தீபிகா படுகோனே சென்னை வந்து தனது படப்பிடிப்பை முடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஷாருக்கான் சென்னை வந்திருக்கிறார். தற்போது அவரது காட்சிகளை படமாக்க இருப்பதனால் ஷாருக்கான் சென்னையில் ஒரு மாத தங்க இருக்கிறார். இந்த செய்தி தமிழ் ரசிகர்களின் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.