Shah Rukh khan : அஜித் நடிப்பில் வசூலில் பல சாதனைகளை புரிந்த படம் விஸ்வாசம்.
விவேகம் படத்தின் தோல்விக்குப் பிறகு அஜித் களமிறங்குவதாலும் மேலும் அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறை இணைந்திருப்பதாலும் விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.
சூர்யா படத்துடன் துணிந்து மோதும் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் – செம போட்டி!
அதை முழுவதுமாக பூர்த்தி செய்ததால் படம் தாறுமாறு வெற்றியை பெற்றது.
உலகளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 160 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படம் எனும் பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியது.
இத்தனைக்கும் அதேநாளில் ரஜினி – சன் பிக்ச்சர்ஸ் எனும் பிரம்மாண்ட கூட்டணியுடன் போட்டிபோட்டு அஜித் இந்த வெற்றியை ருசித்துள்ளார் என்பது அவரது செல்வாக்கை உணர்த்துகிறது.
இப்படி பல சிறப்புகளைக் கொண்ட விஸ்வாசம் படத்தை இந்தியில் ஷாருக்கானை வைத்து எடுக்க சிவா திட்டமிட்டாராம்.
இதற்காக ஷாருக்கானை சந்தித்து கதையும் சொன்னாராம். ஆனால் சில காரணங்களால் இப்படத்துக்கு ஷாருக்கான் நோ சொல்லிவிட்டாராம்.