செம்பருத்தி சீரியலில் இருந்து நடிகை ஷபானா வெளியேறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருவது ஜீ தமிழ். இந்த சேனலில் செம்பருத்தி என்ற சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருப்பவர் ஷபானா.

செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறும் ஷபானா.. காரணம் என்ன? வெளியான ஷாக் தகவல்

இவர் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த ஷபானா தற்போது செம்பருத்தி சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சன் டிவியில் புதிய சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது காரணமாக அவர் இந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சீரியல் ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் மாற்றப்பட்ட நிலையில் சீரியல் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் குறைந்தது.

செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறும் ஷபானா.. காரணம் என்ன? வெளியான ஷாக் தகவல்

இந்த நிலையில் தற்போது ஷபானாவும் இந்த சீரியலில் இருந்து வெளியேற இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க இன்னொரு பக்கம் இதே ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஒன்றில் நாயகனாக நடிக்க ஆர்யன் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.