விவாகரத்து பற்றி வெளியான தகவலுக்கு முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார் ஷபானா.

Shabana About Divorce Issue : தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஷபானா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி கட்சியின் மூத்த மகனாக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரொம்ப பாவமா இருக்கு.. விவாகரத்து பற்றி வெளியான தகவல்.. முதன்முறையாக விளக்கமளித்த ஷபானா

இருவரும் வேறு வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் விருப்பம் இன்றி திருமணம் செய்து கொண்டனர். இதனால் இவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாகவும் இருவருக்குமிடையே விவாகரத்து நடக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து ஷபானா விளக்கம் அளித்துள்ளார். யூடியூபில் வரும் தகவல்களை கண்மூடித்தனமாக நம்புபவர்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது. யூடியூபில் தகவல்களை வெளியிடுவார்கள் அது சரியா தவறா என்பதை தெரிந்துகொண்டு கண்ணியமான வழியில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

ரொம்ப பாவமா இருக்கு.. விவாகரத்து பற்றி வெளியான தகவல்.. முதன்முறையாக விளக்கமளித்த ஷபானா

இதன் மூலம் விவாகரத்து பற்றிய தகவல் முழுக்க முழுக்க வதந்தி என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஷபானா.