shah rukh khan

அசுரன் ஹிந்தி ரிமேக்கில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து தீபாவளிக்கு முன்பு வெளியான திரைப்படம் அசுரன். வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் தனுஷ் நடிப்பின் உச்சத்தை தொட்டிருந்தார்.

Asuran

ஜாதிப் பிரிவினையை இப்படம் உரத்த குரலில் பேசியிருந்தது. எனவே, நல்ல விமர்சனத்தை பெற்றதோடு, இப்படம் நல்ல வசூலையும் பெற்றது. எனவே, இப்படத்தை மற்ற மொழிகளில் எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், அசுரனின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகிள்ளது. சமீபத்தில் வெற்றிமாறனை நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்து இப்படம் பற்றி பேசியதாக செய்திகள் கசிந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஷாருக்கான் நடிக்க விரும்புவது அசுரனின் ஹிந்தி ரீமேக்கா அல்லது வேறு திரைப்படமா என்பது விரைவில் தெரிந்து விடும்.