Sethu Movie
Sethu Movie

Sethu Movie :

தமிழ் சினிமாவில் இனி சிவாஜி, கமல் போல நடிப்புக்காக தன்னையே அர்ப்பணிக்கும் ஒரு நடிகரை பார்க்க முடியுமா என பரவலாக எழுந்த கேள்விக்கு விடையாக வந்தவர் விக்ரம். இவருடைய கேரியரையே புரட்டிப்போட்ட படம் சேது.

சேது வெளியான நாட்களில் தமிழகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் விக்ரமின் நடிப்பே பேச்சுப் பொருளாக இருந்தது.

யாருடா இந்த பையன்? இவனையா இவ்வளவு நாளா ஓரங்கட்டி வைத்தோம் என ரசிகர்கள் பேசத் தொடங்கினார்கள்.

கூடவே பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் விக்ரமை கொண்டாடித் தீர்த்தார்கள்.
அப்படிப்பட்ட படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. ஆனால் தமிழில் இல்லை, இந்தியில்.

இந்தியில் சல்மான் கான் நடிப்பில் தேரே நாம் எனும் பெயரில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதாம். இதில் புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறாராம்.

இந்தியை விட தமிழில்தான் இப்படம் பிளாக் பஸ்டர். அப்படி இருக்கும்போது இந்தியிலேயே இதன் இரண்டாம் பாகம் வரும்போது தமிழில் வரக்கூடாதா?

இதில் பிரிந்த பாலாவும் விக்ரமும் மீண்டும் இணையக் கூடாதா என்பதே தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.