Vijay TV Serial Time Change

பிக் பாஸ் விஜய் டிவி சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Serial Telecast Time Change in Vijay Tv : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அக்டோபர் நான்காம் தேதி முதல் நான்காவது சீசன் தொடங்க உள்ளது.

இரவு 9.30 மணி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதனால் சீரியல்களில் ஒளிபரப்பு நேரத்தில் விஜய் டிவி மாற்றம் கொண்டு வந்துள்ளது.

ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே சீரியல் இனி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 8 மணிக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தேன்மொழி சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நேரத்தை சமீபத்தில் ஒரு மணி நேரமாக மாற்றியது. இந்த நிலையில் மீண்டும் இதனால் அரை மணி நேரமாக மாற்றி விட்டது அதன் ரசிகர்களையும் அப்செட்டாக்கி உள்ளது. இப்படி ஆசைகாட்டி மோசம் பண்ணிட்டீங்களே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.