தனது விவாகரத்தை உற்சாகமாக கொண்டாடியுள்ளார் தமிழ் சீரியல் நடிகை.

Serial Actress Shalini Divorce Celebration : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஷாலினி.

இவர் ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் சைக்கோ தனமாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டை வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். காதல் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்த விஷயத்தை நடிகை ஷாலினி போட்டோ ஷூட் நடத்தி கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.