மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது .

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர். அந்த வகையில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டாக ஓடிய சீரியல்களில் ஒன்று மௌன ராகம்.

இந்த சீரியல் முதல் பாகத்தில் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் சில புதுமுக நடிகர்களுடன் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று நிறைவடைந்தது. இதில் ரவீனா தாஹா சக்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். இதன் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் முழு ஈடுபாடுடன் இருக்கும் ரவீனா நடனம் மீதுள்ள பிரியத்தால் அவ்வப்போது டான்ஸ் ஆடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதேபோல் ரவீனா பிரபல நடன கலைஞர் மணி சந்திராவுடன் அவ்வப்போது நிறைய புகைப்படங்கள் எடுத்து பதிவிட்ட வண்ணம் இருக்கிறார். இந்த நிலையில் மணியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்ட ரவீனா அதில் குறிப்பிட்டுள்ள வாழ்த்து பதிவில் செல்லம் என்ற வார்த்தையும் நிறைய ஹாட்டீன்களையும் போட்டு இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் ஒருவேளை அப்படி இருக்குமோ என்று கிண்டலாக கமெண்ட் செய்து இருவரும் காதலிக்கிறார்களா என சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.