இதுதான் ரியல் ஓணம் கொண்டாட்டம்.. ஷாப்பிங் செய்து துப்புரவு பணியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பவித்ரா – வைரலாகும் வீடியோ!

Onam Special-ஆக துப்புரவு பணியாளர்களுக்கு Surprise 🎁கொடுத்த சீரியல் நடிகை பவித்ரா!🥰 | Velavan Stores

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடை முதல் ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அத்தனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடையாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதுதான் வேலவன் ஹைபர் மார்க்கெட்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற கடை புதியதாக திறக்கப்பட்டது. இந்த கடையிலும் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அத்தனையும் கிடைத்து வருகின்றன.

இதனால் சாதாரண மக்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலருக்கும் இந்த கடை மிகவும் பிடித்த ஒன்றாக விளங்கி வருகிறது. சின்னத்திரை வெள்ளித்திரை youtube சேனல்கள் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்திருப்பதை நாம் பார்த்துள்ளோம்.

அந்த வகையில் தற்போது விஜய் டிவி சீரியல் பிரபலமான பவித்ரா ஓணம் கொண்டாட்டத்திற்காக ஷாப்பிங் செய்துள்ளார். தனது குடும்பத்தாருக்கு தேவையான ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் குழந்தை விளையாட்டு சாமான்கள் என அனைத்தையும் வாங்கி குவித்துள்ளார்.

அதோட நிறுத்தாமல் துப்புரவு பணியாளர்களுக்காக ஆடைகளை வாங்கிச் சென்று அவர்களை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். கொரோனா காலத்திலும் சரி தற்போதும் சரி நமக்கு பெரும் உதவியாக இருந்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு இப்படி ஒரு விஷயத்தை செய்வது தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக பவித்ரா தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.