Megna Divorce Her Husband
திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துள்ளார் விஜய் டிவி நடிகை.

Serial Actress Megna Divorce : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பொன்மகள் வந்தாள். இதில் நாயகியாக நடித்து வருபவர் மேக்னா வின்சன்ட்.

மலையாள திரையுலகில் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தமிழில் கயல் படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

டைட்டா கட்டி அணைத்துக் கொண்ட மாளவிகா மோகனன், புகைப்படத்தைப் பார்த்து பாராட்டும் ரசிகர்கள் – இத பத்தி நீங்க என்ன சொல்றீங்க??

மேலும் பெற்றோர்களின் சம்மதத்துடன் இவர் நான்கு வருடங்களுக்கு முன்பே டான் டம்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகியிருந்த நிலையில் வாய்ப்பு வரவே மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

இதனால் இவருக்கும் இவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டுள்ளனர்.

மருதநாயகம் படம் எப்போது உருவாகும்? விஜய் சேதுபதி கேள்விக்கு கமல் கொடுத்த பதில் – வீடியோவுடன் இதோ.!

விஜய் டிவி சீரியலில் இவருடன் நடித்து வருபவருடன் நெருக்கம் காட்டி வருவதால் இவருக்கும் கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.