Serial Actress Gayathiri With Ajith in Movie

தல அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் சீரியலான ரோஜா நடிகை.

Serial Actress Gayathiri With Ajith in Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். அஜித் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருவதாக சமூக வலைதளங்கள் முழுவதும் அஜித் பற்றிய தகவல்கள் தான் ஆக்கிரமித்து வருகின்றன.

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இவருக்கு ஜோடியாக நடித்து தற்போது சீரியலில் மாமியாராக நடித்து வரும் நடிகை குறித்து தெரிய வந்துள்ளது.

தல அஜித் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று ராஜாவின் பார்வையிலே. இந்த படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் காயத்ரி. தொடர்ந்து பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

மெட்டி ஒலி சீரியலில் சரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது ‌‌‌ ரோஜா சீரியலில் மாமியாராக நடித்து வருகிறார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ரோஜா சீரியல் தான் டி ஆர் பி யில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.