Serial Actor Prajin Twins Baby Photo

சீரியல் நடிகர் பிரஜன் இரட்டை குழந்தைகளின் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

Serial Actor Prajin Twins Baby Photo : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகராக வலம் வருபவர் பிரஜன். பல சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது அன்புடன் குஷி என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவர் சீரியல் நடிகை சாண்ட்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தை பிறந்து இரண்டு வருடம் ஆகியும் இதுவரை இவர்கள் மகள்களின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்து வந்தனர்.

ரசிகர்களின் தொடர்ந்து பிரஜன் மற்றும் சான்ட்ராவிடம் குழந்தைகளின் புகைப்படத்தைப் வெளியிடுமாறு கேட்டு வந்த நிலையில் தற்போது முதல்முறையாக வெளியிட்டுள்ளனர்.

பிரஜனின் இரண்டு மகள்களும் செம க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்டுகளில் பதிவு செய்து வருகின்றனர்.