
Vijaya Raj : சின்னத்திரையில் மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் விஜய் ராஜ்.
சின்னத்திரையில் நடித்த இவரை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 45 வயதான இவர் மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவர் சின்னத்திரையில் சன் டிவி சேனலில் ஒளிபரப்பான நாதஸ்வரம், கோலங்கள், மெட்டி ஒலி என மக்களிடம் வெற்றி பெற்ற சீரியல்களில் நடித்திருந்தார்.