நீங்க மட்டும் என் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் இந்த மூஞ்சிக்கு நான் கேரன்டி இல்லை என ப்ளூ சட்டை மாறன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சீரியல் நடிகர் ஒருவர்.

Serial Actor Blast Reviewer Maaran : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தையும் படத்தில் நடித்திருந்த அஜித்தையும் மோசமாக விமர்சனம் செய்து இருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

அஜித் மூஞ்சில தொப்பையா?? உங்க மூஞ்சிக்கு நான் கேரன்டி இல்லை - ப்ளூ சட்டை மாறனுக்கு சீரியல் நடிகர் எச்சரிக்கை

அஜித்தின் முகத்தில் தொப்பை இருக்கிறது என அவர் விமர்சனம் செய்திருந்தார். இதனால் அவருக்கு பல்வேறு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையிலும் அவர் நான் சொன்னது சரிதான் என தொடர்ந்து அஜித்தை சீண்டிய படி இருக்கிறார்.

அஜித் மூஞ்சில தொப்பையா?? உங்க மூஞ்சிக்கு நான் கேரன்டி இல்லை - ப்ளூ சட்டை மாறனுக்கு சீரியல் நடிகர் எச்சரிக்கை

இப்படியான நிலையில் சீரியல் நடிகர் ராகவேந்திரன் புலி என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்க மட்டும் என் கண்ல மாட்டினா அவ்வளவுதான் உங்க முகத்துக்கு நான் கேரன்டி இல்லை. இப்படிக்கு விஜய்யின் தீவிர ரசிகர் மற்றும் அஜித் சாரின் தீவிர ரசிகர் என பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவை சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.