Senthil-Ganesh-with-his-family

Senthil Ganesh Daughter : தன்னுடைய மகளின் பிறந்த நாளை செந்தில் கணேஷ் வெகுவிமரிசையாக கொண்டாடியுள்ளார். அதற்காக ஊருக்கே விருந்து வைத்துள்ளார்.

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூல மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி.

அஜித் யாருமே சொல்லாத வார்த்தையை சொல்லிட்டார் – டெல்லி கணேஷ் அதிரடி பேட்டி.!

கிராமப்புற பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் பெற்ற இவர்கள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றனர். அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக பாடி வருகின்றனர்.

இவர்களுக்கு 5 வயதில் மகன் ஒருவன் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர்களுக்கு ஒரு குட்டி மகளும் உள்ளார். அவருக்கு நேற்று இரண்டாவது பிறந்த நாள்.

தன்னுடைய மகளின் பிறந்த நாளை செந்தில் கணேஷ் தன்னுடைய சொந்த ஊர் மக்களுக்கு கறிசோறு போட்டு கொண்டாடியுள்ளார். அதனை தன்னுடைய முகநூல் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.